வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (17:02 IST)

முதன்முறையாக அண்டம் அழிவதை பார்க்கிறோம்! – வாய் பிளந்த வானியியலாளர்கள்!

பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு அண்டவெளிகளை கண்டறிந்து வரும் விஞ்ஞானிகள் முதன்முறையாக அழிந்து வரும் அண்டம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

விண்வெளியில் கோடான கோடி நட்சத்திரங்கள், பால்வெளி அண்டங்கள், ப்ளாக் ஹோல்கள் என பலவற்றையும் கடந்த கால விஞ்ஞான வளர்ச்சியால் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் வானியல் நிகழ்வில் முதன்முறையாக அழிந்து வரும் அண்டவெளி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக பல லட்சத்திற்கும் அதிகமான சூரியன்களையும், கோள்களையும், விண்கற்களையும் உண்டாக்கும் அண்டங்கள் ஒரு காலத்திற்கு மேல் தனது விரியும் தன்மையை இழப்பதோடு மைய ஆற்றலையும் இழக்கும். இவ்வாறு ஆற்றலை இழக்கும் அண்டம் அணையும் முன் பிரகாசிக்கும் விளக்கை போல பலமாக தனது ஆற்றலை ஒளியை வெளிப்படுத்தும்.

இவ்வாறான ஒளியானது 9 பில்லியன் ஒளியாண்டுகள் அருகே உள்ள அண்டம் ஒன்றிலிருந்து வெளிப்பட்டு வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஐடி2299 எனப்படும் இந்த அண்டமானது பிரகாசமாகி வரும் நிலையில் சில மில்லியன் ஆண்டுகளில் மொத்த ஆற்றலையும் இழந்து அழிந்து போகும் என கணிக்கப்பட்டுள்ளது.