தாயின் அழுகிய சடலத்துடன் 3 வருடங்கள் வாழ்ந்த பெண்

Ilavarasan| Last Modified சனி, 12 ஜூலை 2014 (12:31 IST)
அமெரிக்காஅவில் தாயின் இறந்து அழுகிய சடலத்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த பெண்ணை காவல்துறையினர் மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க நகரில் புருக்ளீன் அப்பார்ட் மெண்டில் வாழ்ந்து வந்தவர் சாவா ஸ்ட்ரின் (வயது 28) இவரது தாயார் சூசி ரோசென்தால் (வயது 61) கடந்த 2011 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இருந்தாலும் அவர் தனது தாயாரை புதைக்காமல் அவரது சடலத்துடன் 3 வருடங்கள் வாழ்க்கை நடத்தி உள்ளார்.

தினமும் தாயாருக்கு உணவு வைப்பது அவருடன் இரவு படுக்கையில் படுத்து உறங்குவது என தினமும் அன்றாட வேலைகளை செய்து உள்ளார்.
ஒரு கட்டத்தில் சுற்றி உள்ளவர்களுக்கு பிண வாடை அடிக்க தொடங்கியது. அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். காவல்துறையினர் வந்த போது ஸ்ட்ரின் கதவை திறக்க மறுத்து உள்ளார். காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அங்கு அவரது தாயாரின் சடலம் அழுகிய நிலையில் எழும்புகள் எல்லாம் வெளியே தெரிந்த நிலையில் இருந்து உள்ளது..

உடனடியாக காவல்துறையினர் சடலத்தை அப்புறபடுத்தி உள்ளனர். பின்னர் , சாவா ஸ்ட்ரினை மெய்மோண்டிஸ் மனநல மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :