1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (13:49 IST)

இறந்த பின்னும் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் தந்தை...

இறந்து பின்னும் கடந்த நான்கு வருடமாக தனது செல்ல மகளுக்கு தந்தை பிறந்தநாள் பூங்கொத்து அனுப்பி வரும் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.


 
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசித்து வந்தவர் மைக்கேல் செல்லர்ஸ். இவர் புற்றுநோய் காரணாக கடந்த 4 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அந்நிலையில், அவரின் மகள் பெய்லி செல்லர்ஸுன் பிறந்தநாளன்று மைக்கேல் சார்பில் வாழ்த்து செய்தியும், பூங்கொத்தும் வருகிறது. இது கடந்த 4 வருடமாக நடந்து வருகிறது.
 
சமீபத்தில் பெயிலி தனது 21வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு அவரது தந்தையிடமிருந்து வாழ்த்து செய்தி வந்தது. இதில் ‘இதுதான் உனது அப்பா அனுப்பும் கடைசி பிறந்த நாள் வாழ்த்து. என்னை நினைத்து நீ அழக்கூடாது. நான் உன்னை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உனக்கு தேவைப்படும்போது நான் அருகில் இருப்பேன். நான் தற்போது இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருக்கிறேன். ஒருநாள் நாம் சந்திப்போம்” என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதை அப்பெண் தன்னுடையை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது, தான் இறக்கப்போவது தெரிந்து தொடர்ச்சியாக 4 வருடம் தனது மகளின் பிறந்தநாளன்று வாழ்த்து செய்து வரும்படி மைக்கேல் ஏற்பாடு செய்துவிட்டு இறந்துள்ளார் எனத் தெரிகிறது.