முகமற்ற, கோர உருவுடைய உயிரினம்: கடற்கரையில் பரபரப்பு...
அமெரிக்காவில் ஹார்வே புயல் பெரும் பாதிப்பை ஏற்டுத்தியது. புயலின் போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகளால் பல கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கின.
இந்நிலையில், டெக்சாஸ் நகரத்தின் கலவெஸ்டான் பகுதியிலிருந்து 15 மைல் தொலைவில் விசித்திரமான உயிரினம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
முக வடிவமே இல்லாத இந்த உயிரினம் பயங்கர தோற்றத்துடன், கோர பற்களை கொண்டுள்ளது. இதனை பலரும் ஈல் என்னும் மீன் வகை போல் உள்ளதாக கூறிவருகின்றனர்.
இந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.