1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (19:50 IST)

வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கு கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,16,992 ஆகும். இதுவரை 9,28,930 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 2,17,183 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,அமெரிக்காவில் முதன்முறையாக ஒரு நாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு்ள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில் ஒரு குடும்பத்தில்  உள்ள பலருக்கு தீவிர கொரோனா தாக்கல் இருந்ததை அடுத்து, அனைஅனைஅவ்ரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களின் வீட்டில் இருந்த நாய்க்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்பொது,வின்ஸ்டன் என்ற அந்த நாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.