1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2016 (16:38 IST)

காதலர் தினத்தில் எகிறிய காண்டம் விற்பனை: நல்லா பண்றீங்க காதல்

காதலர் தினத்துக்கான வரவேற்பு வர வர அதிகரித்து வருகின்றன. தங்கள் மனம் விரும்பும் நபரிடம் அந்த நாளில் காதலை சொல்வதும். காதலிப்பவர்கள் மனம்விட்டு பேச ஒருவரை ஒருவர் சந்திப்பதும் சகஜம். ஆனால் இன்று நிலமை மாறி இருக்கிறது.


 
 
அவசரமான உலகில் மனித வாழ்க்கை முறை மட்டுமல்ல, மனித காதல் முறையும் மாறி விட்டது. சமீபத்தில் ஸ்கொட்டிஷோர்பிட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு, இதனை பட்டவர்த்தனமாக நிரூபிக்கிறது. காதல் என்ற வார்த்தையும், காதலர் தினமும் தற்கால இளைஞர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற ஐயம் எழுகிறது.
 
ஸ்கொட்டிஷோர்பிட் என்ற அந்த நிறுவனம் காதலர் தினப்பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், கருக்கலைப்பு நிலையம் மற்றும் வைத்திய நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் இலங்கையில் காதலர் தின கொண்டாட்ட நாளில் குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங்களின் (காண்டம்) விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
 
இது மட்டுமில்லை 21 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக காதலர் தினம் முடிந்த பிறகு அடுத்து வரும் 15, 16, 17 தேதிகளில் கருக்கலைப்பு செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
 
காதலர் தினத்தில் இப்படி காண்டம் போன்ற பாலியல் தொடர்பான பொருட்களின் விற்பனை அதிகரிப்பது, வரும் காலங்களில் காதல் என்பது மனம் சார்ந்த விஷயம் என்பது மாறி அது உடல் சார்ந்த விஷயமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.
 
காதலிப்பதும், காரியம் முடிந்ததும் கழட்டிவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு காதல் என்ற பெயர் பொருத்தமாக இருக்காது. வேறு வார்த்தை தான் பொருத்தமாக இருக்கும். உடல் இச்சையையும், மாமிச பசியையும் போக்கிக்கொள்ள புனிதமான காதல் என்ற போர்வையில் செயல்படும் சீர்கெட்ட இளைஞர்களே உங்களால், நல்ல காதலர்களுக்கும், காதலை புனிதமாக போற்றி வரம்பு மீறாமல் மனதோடு சேர்ந்து வாழும் இளைஞர்களுக்கும் கெட்டப்பெயர். வெளிவேடக்காரர்களே தயவு செய்து காதலை கொச்சைப்படுத்தாதீர்கள்.