டொனால்ட் டிரம்ப் வெற்றியில் சந்தேகம்: ஓட்டு இயந்திரம் ஹேக்கிங்?
டொனால்ட் டிரம்ப் வெற்றியில் சந்தேகம்: ஓட்டு இயந்திரம் ஹேக்கிங்?
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார். இந்நிலையில் அவரது வெற்றியில் சந்தேகம் இருப்பதாகவும், ஓட்டு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடந்த கருத்துக்கணிப்புகள் பலவும் ஹிலாரியே வெற்றி பெறுவார் என ஆரூடம் செய்தன. டிரம்ப் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றியது டிரம்ப் அதிபராக தேர்வானார். ஹிலாரிக்கு அதிக மக்களின் ஓட்டு கிடைத்தாலும், அதிபரை தேர்வு செய்யும் தேர்வாளர்கள் அதிகம் பேர் டிரம்ப் கட்சிக்கே தேர்வானார்கள்.
இந்நிலையில் இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழும்பியுள்ளது. அமெரிக்க தேர்தலில் ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஓட்டு சீட்டு முறை, இயந்திர முறை, இ-மெயில் முறையில் ஓட்டுப்போடுதல்.
இதில் ஹிலாரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட 3 மாகாணங்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் செயல்பட்ட ஓட்டு இயந்திர முறை பயன்படுத்தப்பட்டது. அந்த தொகுதியில் ஹிலாரி தோல்வியை தழுவியதையடுத்து அந்த ஓட்டு இயந்திரத்தை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தகவல்களை மாற்றி முறைகேடு செய்திருக்கலாம் என பிரபல கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் அலெக்ஸ் ஹால்டர்மென் கூறி இருக்கிறார்.
இதனையடுத்து அந்த மூன்று மாகாணங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் தவறு நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் ஹிலாரி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.