புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (11:30 IST)

தாக்குதல் நடத்துனோமா? எங்க? புரளிகளை அள்ளிவிடும் சீன ஊடகங்கள்!

லடாக் எல்லையில் சீன – இந்திய படைகளிடையே நடந்த மோதலை தொடர்ந்து இந்திய ராணுவம் சீன எல்லைகளை தாக்குவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் விதமாக சீனாவுடனான பொருளாதார உறவு நிலைகளில் இந்தியா தடையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் எல்லை பிரச்சினை குறித்து செய்தி வெளியிடும் சீன ஊடகங்கள் இந்தியா சீன எல்லைகளை ஆக்கிரமிப்பதாகவும், குண்டுகளை வீசி தாக்குவதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன. தி நியூ சைனா நியூஸ் என்னும் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சீனாவின் கெசிலாங் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும், அவர்கள் குண்டுகளை வீசி சீன வீரர்களை தாக்குவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இருநாட்டு படைகளும் பின்வாங்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில் சீன ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.