செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (11:59 IST)

வேற்றுகிரகவாசிகளை தேடி புது பயணம்!!!

வேற்றுகிரகவாசிகள் பற்றிய தேடுதலை அதிகரிக்கவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தை புரிந்து கொள்ளவும் உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கியுள்ளது. 

 
விண்வெளியில் இருந்து மர்மமான முறையில் பல ஒலிகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதை வேற்றுகிரகவாசிகள் அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வுகள் நடக்கின்றன. அந்த ஒலிகளை மொழி மாற்றம் செய்யும் முயற்சியும் நடந்து வருகிறது.
 
அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து வேற்றுகிரகவாசிகள் குறித்த தேடலில் சீனவும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடந்த 2011-ல் உலகின் மிகப் பெரிய தொலை நோக்கியை உருவாக்கும் பணியை சீனா தொடங்கியது.
 
குய்சோ மாகாணத்தில், பிங்டாங் பகுதியில் உள்ள மலைசூழ்ந்த கர்ஸ்ட் பள்ளத்தாக்கு தேர்வு செய்யப்பட்டது. மேலும் வானியல் அதிசயங்களை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் பள்ளத்தாக்கு அருகே 5 கி.மீ சுற்று வட்டாரத்தில் வசித்து வந்த 8,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
 
இதைத் தொடர்ந்து, 4,450 ரிப்ளெக்டர் பேனல்கள் பதித்த உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
 
இதன் மூலம் பூமிக்கு அப்பால் வாழும் வேற்றுகிரகவாசிகளின் குரலையும், பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.