சீன டாய்லெட் பேப்பரில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்
அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் புகைப்படம் பதித்த சீனத் தயாரிப்பு டாய்லெட் பேப்பருக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அமரிக்க அதிபராக இருப்பவர் ஒபாமா. இவரது பதவிகால முடிவடைவதை அடுத்து அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களை கட்டியுள்ளது. அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஆரம்பம் முதலே இவர் சர்ச்சையான கருத்துக்களை பேசிவருகிறார். குறிப்பாக சீனர்களை பேசினார். அதில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனா பறித்துவிட்டதாகவும், அமெரிக்காவின் பணத்தில்தான் சீனா வாழ்கிறது என்று பேசினார். இவரது இந்த பேச்சுக்கு சீனர்களுக்கு கடும் கோபத்தை கிளப்பியது.
இந்நிலையில் சீனாவை சேர்ந்த அலிபாபா எனும் ஆன்லைன் வர்த்தக இணையதளத்தில், சீன தயாரிப்பாளர்கள் பலர், டிரம்ப் புகைப்படத்துடன் கூடிய டாய்லெட் பேப்பரை விற்பனை செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் வசிக்கும் சீனர்கள் ஆன்லைனில் அதனை வாங்கி, தங்கள் ஆத்திரத்தை டாய்லெட்டில் தீர்க்கிறார்கள்.
சீனர்கள் தவிர டிரம்ப்பை பிடிக்காத அமெரிக்கர்களும் இந்த டாய்லெட் பேப்பரை வாங்கி வருகின்றனர்.