வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 26 மார்ச் 2017 (23:19 IST)

இரண்டாக பிளந்த சீன அடுக்குமாடி கட்டிடம். 5 பேர் பரிதாப பலி

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள மங்கோலிய பிரிவில் அமைந்துள்ள நகரம் படுவா என்ற நகரம். இந்த நகரத்தில் இருக்கும் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக அந்த அடுக்குமாடி கட்டிடமே இரண்டாக் பிளந்தது போன்று காட்சி அளிக்கின்றது.




 

இந்த வெடிவிபத்து காரணமாக அந்த அடுக்குமாடி கட்டடத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்ததால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாட்டுகளில் சிக்கியவர்களை வெளிக் கொண்டு வர போராடினர்.

இதுவரை 5 பேர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இடிபாடுகளில் பிணம் இருக்க வாய்ப்பு உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. குடியிருப்புக்கு சென்ற இயற்கை எரிவாயு குழாயில் ஏற்பட்ட லீக்கே இந்த வெடிவிபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.