புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (10:46 IST)

3 குழந்தைகள் பெற்றால் அசத்தல் சலுகைகள்! – சீனா அறிவிப்பு!

சீனாவில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை சீனா அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வந்ததால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் சீனாவில் குழந்தைகள் பிறப்பு வெகுவாக குறைந்தது.

ஆனால் அதேசமயம் பிறப்பு எண்ணிக்கை குறைவதை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சீனாவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியது. இது இப்படியாக தொடர்ந்தால் சீனாவில் சில வருடங்களில் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால் மீண்டும் குழந்தைபேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது சீனா.

இந்நிலையில் தற்போது மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை சீனா அறிவித்து வருகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெரும் பெண்ணுக்கு பேறுகால விடுப்பு அதிகரிப்பு, குழந்தை பெறும் பெண்ணின் கணவனுக்கும் விடுமுறை மற்றும் உதவித்தொகை என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.