வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 12 ஜூன் 2014 (16:35 IST)

விண்வெளிக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க சீனாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம்

விண்வெளிக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க சீனாவும், ரஷ்யாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நகல் ஐ.நா சபையில் கொடுக்கப்பட்டுள்ளது.
 
உலக நாடுகள் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் செயற்கைக் கோள்களை அனுப்பி வருகின்றன. இவற்றில் சில உளவு பார்க்கும் செயற்கைக் கோள்களாகும். சில செயற்கை கோள்கள் அணு ஆயுதங்களை கொண்டதாகவும் உள்ளன.
 
இந்நிலையில் விண்வெளிக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதை தடுக்க சீனாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் நகல் ஐநா சபையின் சார்பில் ஜெனிவாவில் நடந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல விண்வெளிக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க உலக நாடுகள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று ஐநாவுக்கான துணை தூதர் வு ஹெய்டோ கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், "தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் உலக நாடுகள் போட்டி போட்டு ஆயுதங்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் விண்வெளியில் ஆயுதப் போட்டி நிலவுகிறது.
 
விண்வெளியை அமைதிப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அங்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதை தடுக்கும் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட வேண்டும். இந்த நோக்கத்தை வலியுறுத்துவதாக இந்த ஒப்பந்த நகல் கொடுக்கப்பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.