1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (12:40 IST)

பெலோசியால் கடுப்பான சீனா; தைவானுக்கு பொருளாதார தடை!

China
அமெரிக்க சபாநாயகர் பெலோசி தைவான் சென்றதன் எதிரொலியாக தைவான் மீது சீனா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

சீனாவின் அருகே உள்ள தைவான் தன்னை சுதந்திர நாடாக கருதும்போதிலும் சீனா தைவானை தனது கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிராந்தியம் என கூறி வருகிறது. நீண்ட காலமாக இந்த பிரச்சினை இருந்து வரும் நிலையில் தைவானை தனி நாடாகவே அங்கீகரித்து அமெரிக்கா அதரவளித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க மக்கள் பிரதிநிதி நான்சி பெலோசி தைவானுக்கு செல்வதாக அமெரிக்க அறிவித்தது.

இதற்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தைவான் எல்லையருகே ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களையும் நிலைநிறுத்தி வைத்தது. இதனால் நான்சி பெலோசியின் பயணம் உலக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தைவான், அமெரிக்க போர் விமானங்களின் பாதுகாப்போடு பெலோசியின் விமானம் தைவானுக்குள் நுழைந்தது. இதனால் கடுப்பான சீனா, தைவான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

பெலோசியின் வருகையால் தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை குழித்தோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு தீவிரவாத சமிக்ஞையை அனுப்பியுள்ளது என சீனா தெரிவித்துள்ளது.

மேலும் பெலோசியின் வருகையால் கடுப்பான சீனா, தைவானின் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகள் மற்றும் இறக்குமதி தடைகளை விதித்துள்ளது. முக்கியமாக தைவானில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு பொருட்கள் பல தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் தைவான் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் சிக்கலில் தவித்து வருகின்றன.