கஞ்சா பழக அரசு அனுமதி: எங்கு தெரியுமா?
கஞ்சா உலகில் முக்கிய போதைப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. இது ஒரு இயற்கை தாவரமாகும்.
சில நாடுகளில் மருத்துவ பயன்பாடுகளுக்காக மட்டும் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் கஞ்சாவை கேளிக்கை விடுதிகளில் அளவான முறையில் பயன்படுத்த அரசு அனுமதித்துள்ளது.
போதை பொருட்களின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் நாடுகளில், எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கஞ்சாவை பயன்படுத்துவதும் உண்டு.
இந்நிலையில், கனடா நாட்டில் உள்ள கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை பயன்படுத்த உரிய சட்டம் அடுத்த வாரத்தில் கொண்டுவரப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
இச்சட்டத்தில், கஞ்சாவை பயன்படுத்த குறைந்தபட்ச வயது 19 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு நபருக்கு அதிகபட்சமாக 30 கிராம் கஞ்சா அனுமதிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.