திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (15:41 IST)

விளையாட அனுமதிக்காததால் அக்காவை சுட்டுக் கொன்ற தம்பி

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால், தம்பியே அவரது அக்காவை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாகாணத்தை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வேலைக்கு சென்றதால் வீட்டில் டிஜோனே ஒயிட் மற்றும் அவரது 9 வயது தம்பி இருந்தனர். நேற்று மதியம் டிஜோனே ஒயிட்  வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கியால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.
 
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒயிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.