வாட்ஸ்அப் பயன்படுத்த 72 மணி நேரம் தடை: நீதிமன்றம் உத்தரவு


Caston| Last Modified செவ்வாய், 3 மே 2016 (13:55 IST)
போதைப்பொருள் வழக்கு ஒன்றில் தகவல் தர மறுத்ததால் வாட்ஸ்அப் உபயோகத்தை 72 மணி நேரம் நிறுத்தி வைக்கை பிரேசிலில் உள்ள செர்ஜிபி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 
 
செர்ஜிபி நகர நீதிபதியாக இருக்கும் மார்சல் மாண்டால்வோ, குற்றவியல் வழக்கு ஒன்றில் தொடர்புடையை வாட்ஸ்அப் உரையாடல்களை தர வேண்டும் என வாட்ஸ்அப் நிர்வாகாத்திடம் கேட்டு இருந்தார். ஆனால் வாட்ஸ்அப்-இல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய வசதியால் அதனை எங்களால் கூட தர முடியாது என கூறியது வாட்ஸ்அப் நிர்வாகம்.
 
நீதிமன்றம் கேட்ட தகவலை தர மறுத்ததால் திங்கள் கிழமை காலை முதல் 72 மணி நேரம் வரை வாட்ஸ்அப் உபயோகத்துக்கு தடை விதித்தார் நீதிபதி. ஆனால் எங்களிடம் எந்த தகவலும் இல்லை எனவும், பொதுமக்கள் அனுப்பும் எந்த தகவலும் எங்கள் சர்வரில் இருக்காது. தகவல் அனுப்பப்படும் இடத்தில் இருந்து அது சென்று சேரும் இடத்தில் மட்டுமே அந்த தகவல் இருக்கும். சம்மந்தப்பட்ட நபர்களை தவிர வேறு யாராலும் அதைப் படிக்க முடியாது. வாட்ஸ்அப் நிர்வாகத்தால் கூட அதனை படிக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளது வாட்ஸ்அப் நிர்வாகம்.
 
இதனால் நீதிபதி ஏராளமான பிரேசில் மக்களை வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாமல் தண்டித்துவிட்டார் என வாட்ஸ்அப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :