கருத்துக்கணிப்பை மீறி வெற்றி: பிரேசில் அதிபராகிறார் இடதுசாரி தலைவர்!
கருத்துக்கணிப்பை மீறி வெற்றி: பிரேசில் அதிபராகிறார் இடதுசாரி தலைவர்!
பிரேசில் நாட்டில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியா லூலா டா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என நாட்டின் அனைத்து பத்திரிகைகளும் கருத்துகணிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் கருத்துக் கணிப்பை மீறி அவர் வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும் இடதுசாரி தலைவருமான லூயிஸ் இனாசியா லூலா டா என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் அதிபராக பதவியேற்கவுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டு மக்கள் அவருடைய வெற்றியை கொண்டாடி வருகின்றனர்
இந்தநிலையில் பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியா லூலா டா வெற்றி பெற்றதற்கு பொதுமக்கள் பலர் கொண்டாடி வந்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
குறிப்பாக லாரி ஓட்டுநர்கள் திடீரென புதிய அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 மாகாணங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் இருபுறமும் வாகனங்கள் ஆக்கிரமித்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Mahendran