வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 3 செப்டம்பர் 2016 (20:57 IST)

காதலி கதறுகிறாள் கல்லறையை உடையுங்கள்

கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் காதலன், கல்லறையில் புதைக்கப்பட்ட காதலி உயிருடன் இருக்கிறாள் என்று கூற அப்பெண்ணின் பெற்றொர்கள் கல்லறையை உடைத்துள்ளனர்.


அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்த காரணத்தினால், அவரது குடும்பத்தினர் லா எண்ட்ராடா பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்துள்ளனர்.

கல்லறையில் அடக்கம் செய்த பகுதிக்கு சென்ற அப்பெண்ணின் காதலன், கல்லறையில் புதைக்கப்பட்ட பெண் சத்தமிடுவதாக கூறியுள்ளார். இதனால் அவர் பெண்ணின் குடும்பதாரிடம் சென்று உங்கள் பெண் உயிரோடு இருப்பதாகவும், தொடர்ந்து சத்தமிடுவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் மகள் உயிரோடு இருப்பதாக கருதி பெற்றோர்கள் கல்லறையை உடைத்துள்ளனர். சவப்பெட்டியில் இருந்த பெண்ணை எடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாகவும், அது அப்பெண்ணின் காதலனுடைய கற்பனை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அப்பெண்ணின் குடும்பத்தினர் மீண்டும் இறுதிசடங்கு செய்து அப்பெண்ணின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.