திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 மார்ச் 2017 (05:21 IST)

வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்

அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற நிமிடம் முதல் அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு சொந்த நாட்டு மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.



 


இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் மிரட்டல் வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றில் வெடிகுண்டு ஒன்று சில நிமிடங்களில் வெடிக்வுள்ளதாக வெள்ளை மாளிகை கார் டிரைவருக்கு போன் மூலம் ஒரு மிரட்டல் வந்தது.

இதனையடுத்து வெள்ளை மாளிகையில் அதிரடி படையினர் சோதனையிட்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டெடுக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டாலும், வெள்ளை மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.