1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 31 மே 2017 (11:08 IST)

காபூலில் இந்திய தூதரகத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு!!

காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் பெரும்பாலும் உள்ளன. அதில் இந்தியா மற்றும் ஜெர்மெனி நாட்டு தூதரங்களும் அடங்கும்.


 
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரத்துக்கு அருகே கார் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
 
இந்திய தூதரகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரக வாயிலுக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் இந்திய தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.  


 

 
இந்த இடத்திற்கு அருகில்தான் ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகி இருக்க கூடும் என தெரிகிறது.