புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (13:50 IST)

உசைன் போல்ட் படுக்கையிலும் வேகமானவர் : போட்டுடைத்த முன்னாள் காதலி

உசைன் போல்ட் படுக்கையிலும் வேகமானவர் : முன்னாள் காதலி

ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டை பற்றி நாளுக்கு நாள் பல ரகசியங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.


 

 
ஓட்டப்பந்தயத்தில் எப்படி கில்லாடியோ அப்படி பெண்கள் விஷயத்திலும் அவர் கில்லாடிதான் என்று தெரிய வந்திருக்கிறது. 
 
சமீபத்தில்,  ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயது ஜேடி துர்தே என்ற கல்லூரி மாணவி போல்ட் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதிலும், குறிப்பாக மற்ற ஆண்கள் போலத்தான் போல்ட்டும் “பெர்மார்மன்ஸ்” செய்ததாக கூறி ஷாக் கொடுத்துள்ளார்.  
 
இரவு என்றாலே கேளிக்கை விடுதி, நடசத்திர ஹோட்டல், பெண்கள் என கும்மாளம் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் உசைன் போல்ட். பார்ட்டி முடிந்ததும் விருப்பம் உள்ள பெண்களை தனது அறைக்கு அழைத்து சென்றுவிடுவாராம். 
 
அவருக்கு கேசி பென்னட் என்ற ஒரு காதலி உண்டு. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நம்பப்படுகிறது. 
 
இந்நிலையில், போல்டின் முன்னாள் காதலியான அமெரிக்க மாடல் அழகி நைலா கில்லர்ட்(27) போல்ட் பற்றி சுவையான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது “2013ஆம் ஆண்டு நடந்த தடகள போட்டியில்தான் அவரை முதலில் சந்தித்தேன். நான் முதன் முதலாய் அவரை சந்திக்கும் போது அவருடன் ஒரு பெண் இருந்தார். போல்ட் என்னிடம் வந்து மூன்று பேராக உறவு கொள்ளலாம்.. வருகிறீர்களா என்று அழைத்தார். 
 
ஆனால் நான் மறுத்துவிட்டேன். மூன்று வருடங்கள் நாங்கள் காதலித்தோம். அவருக்கு படுக்கை விஷயத்தில் ஆவல் அதிகம். அவருடன் டேட்டிங் சென்ற முதல் அமெரிக்கப் பெண் நான்தான். படுக்கையிலும் அவர் உலகின் வேகமான மனிதர்தான்” என்று கூறியுள்ளார்.
 
உசைன் போல்ட் பற்றி இன்னும் என்னென்ன செய்திகள் வெளிவருமோ?...