திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (11:29 IST)

பொலிவியா அதிபருக்கு டி.என்.ஏ. பரிசோதனை: காதலியின் குழந்தைக்கு தந்தையா?

பொலிவியா அதிபருக்கு டி.என்.ஏ. பரிசோதனை: காதலியின் குழந்தைக்கு தந்தையா?

பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மோரெல்ஸ் தனது காதலியின் குழந்தைக்கு தந்தையா என்பதை அறிய  டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.


 

 
பொலிவியா நாட்டின் அதிபராக இருப்பவர் இவோ மோரெல்ஸ். இவரது முன்னாள் காதலி கேபிரியல்லா ஷபாதாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
 
அந்தக் குழந்தை இறந்து விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென கேபிரியல்லா ஒரு சிறு வனை காட்டி இந்த சிறுவன் பொலிவிய அதிபர் இவோ மோரெல்சின் மகன் என்று கூறினார்.
 
 கேபிரியல்லாவின் இந்த கூற்றை மோரெல்ஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த சிறுவனின் தந்தை யார் என்பதை அறிய அதிபர் இவோ மோரெல்சுக்கு டி.என்.ஏ. பரி சோதனை நடத்த உத்தர விட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அவருக்கு டி.என்.ஏ. பரிசோ தனை நடத்தப்பட்டது.
 
இவோவின் முன்னாள் காதலி கேபிரியலா ஷபாதா பணமோசடி வழக்கில் தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.