1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : புதன், 30 செப்டம்பர் 2015 (13:52 IST)

அமெரிக்காவின் பணக்காரர்கள் பட்டியலில் 22 ஆண்டுகளாக முதலிடத்தில் பில் கேட்ஸ்

அமெரிக்காவின்  பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தொடர்ந்து 22 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பதாக Forbes என்ற பத்திரிகை அறிவித்துள்ளது.


 


 
இந்த ஆண்டிற்கான அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை Forbes என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.  மொத்தம் 400 பெயருடைய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டதில், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 
 
ஆனால், கடந்த ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு 33 ஆயிரம் கோடி வீழ்ச்சி கண்டிருப்பதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. இவருக்கு அடுத்தப்படியாக நிதி முதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைவர் வாரன் ஃபப்பெட் 4 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எலிசன் 3வது இடத்தையும் பிடித்துள்ளார். மேலும், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 4 வது இடத்திலும், ஃபேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுகர்பெர்க் 7 வது இடத்திலும் , கூகுள் தலைமை அதிகாரி லேரி பேஜ் 10வது இடத்திலும் உள்ளனர். 
 
அமெரிக்காவின்  முதல் 10 பணக்காரர்கள்  பட்டியலில், பிரபல இணைய தள நிறுவனர்கள் 3 பேர் முதல்முறையாக இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.