கண்ணால் பார்க்கக்கூடிய பாக்டீரியா - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
கண்ணால் எளிதில் பார்க்கக்கூடிய பாக்டீரியா செல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய கண்ணுக்கு தெரியும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 0.9 செ.மீ. நீளமுள்ள பாக்டீரியாக்கள் கரீபியன் தீவுகளில் உள்ள சதுப்பு நிலங்களில் இருப்பதாக தெரிவித்தனர். கரீபியன் சதுப்புநிலக் காட்டில், மனித கண் இமைகளின் அளவு மற்றும் வடிவத்திற்கு வளரும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த செல்கள் இதுவரை கவனிக்கப்பட்ட மிகப்பெரிய பாக்டீரியாக்கள் ஆகும். எஸ்கெரிச்சியா கோலி போன்ற மிகவும் பழக்கமான பாக்டீரியாவை விட ஆயிரக்கணக்கான மடங்கு பெரியது. கலிஃபோர்னியாவின் பெர்க்லியில் உள்ள கூட்டு ஜீனோம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள நுண்ணுயிரியலாளர் ஜீன்-மேரி வோலண்ட் கூறுகையில், எவரெஸ்ட் சிகரத்தின் அளவுள்ள மற்றொரு மனிதனை சந்திப்பது போல் இது இருக்கும் என கூறினார்.