டிஜிட்டல் மூலம் யாசகம் பெறும் பிச்சைக்காரர்கள்
சீனாவில் பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் யாசகம் பெறுகிறார்கள்.
இந்த நவீன உலகில் தற்போது எல்லா சேவைகளும் டிஜிட்டல் மையமாகி வருகிறது. பண பரிவர்த்தனைகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் முறையில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சீன நாட்டில் உள்ள பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறி அசத்தி வருகின்றனர். சீனாவில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் முறையில் யாசகம் பெற்று அசத்தி வருகின்றனர்.
கையில் துணி முட்டை இருக்கிறதோ இல்லையொ அவர்கள் அகையில் க்யூஆர் கோட் மற்றும் கார்டுகள் தேய்ப்பதற்கான இயந்திரம் உள்ளது. பணம் இல்லை என்று சொல்பவர்களிடம் டிஜிட்டல் முறையில் யாசகம் கேட்கின்றனர்.
அமெரிக்காவை விட சீனாவில் 50 மடங்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.