1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 5 மார்ச் 2016 (15:19 IST)

ஓடும் காரில் இருந்த கீழே விழுந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை : வீடியோ

சீனாவில், நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. தீடீரெனெ அந்த காரின் பின்புறம் இருந்த கதவு திறந்து, அதன் வழியாக ஒரு குழந்தை கீழே விழுகிறது. 


 

 
அதிர்ஷவசமாக உயிர் தப்பித்த அந்த குழந்தை, காரின் பின்னாலேயே ஓடுகிறது. நல்ல வேளையாக, அந்த காரின் பின்னால் வந்த எந்த வண்டியும், அந்த குழந்தை மீது மோதவில்லை.
 
அதன்பின் சிறுது தூரம் சென்ற அந்த காரிலிருந்து, ஓடி வந்த அந்த குழந்தையின் தாத்தாவிடம் ஒரு பெண் அந்த குழந்தையை ஒப்படைக்கிறார். 
 
இந்த சம்பவங்கள் அனைத்தும், பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு காரின் முன்பக்கம் பொருத்தப்பட்டிருந்த ஒரு கேமராவில் பதிவாகியுள்ளது.
 
சில நாட்களுக்கு முன்பு, அந்த பெரியவின் காரின் பின்பகுதியில் ஒரு வாகனம் மோதியதால், வண்டியின் பின் பக்கம் இருந்த கதவு பழுதடைந்து, தானகவே திறந்து கொள்ளுமாம். அதனாலேயே அந்த குழந்தை கீழே விழுந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
அந்த அதிர்ச்சி வீடியோ உங்கள் பார்வைக்கு..