வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (14:41 IST)

வேலை நேரம் முடிந்து விட்டால் முதலாளி போனை அட்டெண்ட் பண்ண தேவையில்லை: புதிய சட்டம்

cellphone
வேலை நேரம் முடிந்தவுடன் முதலாளியின் போனை அட்டென்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து உள்ளதை அடுத்து அந்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றால் கூட சில அவசர பணி காரணமாக முதலாளியிடமிருந்து போன் வந்தால் அதை அட்டென்ட் செய்து அந்த பணிகளை முடித்து தர வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் இது குறித்த புதிய சட்டம் இயற்ற திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த புதிய சட்டத்தின்படி வேலை நேரத்திற்கு பின்னர் முதலாளியிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமை தொழிலாளருக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டம் இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. வேலையின் போது பயன்படுத்தும் மொபைலை பணி நேரம் முடிந்ததும் சுவிட்ச் ஆப் செய்து கொள்ளும் சட்டம் ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran