ஆஸ்திரேலியா வானில் தெரிந்த பிரகாச தீப்பிழம்பு! – உடைந்த சீன சாட்டிலைட்டா?

Australia
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:55 IST)
ஆஸ்திரேலொயாவில் இரவில் வானில் திடீரென தோன்றிய பிரகாசமான தீப்பந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இரவு நேரத்தில் சிறு வெளிச்சம் ஒன்று தோன்றியுள்ளது. சிறிது நேரத்தில் மிகவும் பிரகாசமான தீக்கோளமாக மாறிய அது வானில் நீண்ட நெருப்பு வாலுடன் எறிந்து கொண்டே சென்றது. சில நிமிடங்களில் இரண்டு மூன்றாய் சிதறி அதே வேகத்தில் பயணித்து மறைந்தது. இதை கண்ட மக்கள் அதை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள வானியல் நிபுணர்கள் வானில் தெரிந்த அந்த பொருள் விண்கல் இல்லை என்று கூறியுள்ளனர். கைவிடப்பட்ட சீனாவின் சேட்டிலைட்டில் இருந்து உடைந்த பாகங்கள் பூமியின் எல்லைக்குள் புகுந்தபோது தீப்பற்றி எரிந்திருக்கலாம் என ஆஸ்திரேலிய உள்ளூர் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :