1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (12:13 IST)

டோக்கியோ பள்ளியில் மோடி - 'நான் ஒரு மூத்த மாணவன்' எனப் பேச்சு

டோக்கியோ நகரத்தில் உள்ள தைமை ஆரம்பப் பள்ளியை 2014 செப்டம்பர் 01 அன்று பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். 
 
ஜப்பானிய ஆரம்ப மற்றும் நடுநிலைக் கல்வி முறை குறித்த செயல் விளக்கத்துக்குப் பிறகு பேசிய பிரதமர், இந்த 136 வயதான பள்ளியில் ஜப்பானிய பள்ளி முறையில் எப்படி நீதி நெறிக் கல்வி, நவீன முறை, நன்நடத்தை ஆகியவை ஒருங்கிணைந்திருக்கிறது என்று பயிலவே நானும் ஒரு மூத்த மாணவனாகவே வந்துள்ளேன் என்று தெரிவித்தார். 

 
மதீப்பீட்டு முறை தேர்வு முறை மற்றும் குழந்தையின் கல்வியில் எப்படி பெற்றோர்களை ஈடுபடுத்துவது ஆகியவை குறித்தும் பிரதமர் தெரிந்து கொண்டார்.
 
உலகமே 21ஆவது நூற்றாண்டு, ஆசியாவுக்குச் சொந்தமானது என்று ஒப்புக்கொள்கிறது. நாம் பிற ஆசிய நாடுகளின் மொழிகளையும் அதன் மதிப்பையும் கற்றுக்கொள்வது இந்த நூற்றாண்டின் மனித நேயத்திற்கு உதவியாக இருக்கும். இந்தியா, ஜப்பானிய மொழியைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால், ஜப்பானிய மொழிக்கான ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். 
 
ஜப்பானிய மொழியை இணையத்தளத்தில் கற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஜப்பான் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர், ஜப்பானிய கல்வி கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துணை அமைச்சர் மெக்காவா கிஹாய் மற்றும் தைமை ஆரம்பக் கல்வியின் ஆசிரியர்களிடம் விவாதித்த போது தெரிவித்தார்.