1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 3 ஜூன் 2017 (06:59 IST)

மோடியை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்ட அமெரிக்க பெண் பத்திரிகையாளர்

உலக அளவில் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் புகழ் பெற்றவர் பாரத பிரதமர் நரேந்திரமோடி என்பது அனைவரும் அறிந்த்தே. ஃபேஸ்புக்கில் உலகிலேயே நம்பர் ஒன் இடத்தில் உள்ள பிரதமர் மோடி டுவிட்டரில் அமெரிக்க அதிபர டொனல்ட் டிரம்ப்பை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தை 30 மில்லியன் பேர் தொடர்கின்றனர்.


 


இந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்றபோது அங்கிருந்த அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் மோடியை பார்த்து கெல்லி நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு மோடி புன்னகை ஒன்றை மட்டுமே பதிலாக கூறினார். அமெரிக்க பெண் பத்திரிகையாளரும் மோடியும் உரையாடியது இதுதான்:

மோடி: நான் உங்கள் டுவிட்டரை பார்த்தேன்

பத்திரிக்கையாளர்: அப்படியா?

மோடி: குடையுடன் இருந்தீர்கள்?

பத்திரிக்கையாளர்: என்னை டுவிட்டரில் பார்த்தீர்களா? நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா?

மோடி: புன்னகையுடன் தலையாட்டினார்.

அமெரிக்க பத்திரிகையாளர் தெரிந்தே இந்த கேள்வியை கேட்டாரா? அல்லது தெரியாமல் கேட்டாரா என்று சக பத்திரிகையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.