1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (00:16 IST)

இந்தியாவுக்கு ஆப்பிள் நன்கொடை அளிக்கும் சி.இ.ஒ உறுதி

இந்தியாவுக்கு ஆப்பிள் தனது ஆதரவு தெரிவிப்பதுடன் தொற்றிலிருந்து மீட்புக்கான நன்கொடை அளிக்கும் என அந்நிறுவனத்தில் சி.இ.ஓ டிம் குக் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளதாகவும் இதனால் உயிர்பலிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு  ஆப்பிள் நன்கொடை அளிக்கும் என அந்நிறுவனத்தில் தலைமை செயலதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தப்பெருந்தொற்றுக் காலத்தில், இந்தியாவில் கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் மக்கள் மீதுதான் நம் முழு கவனம்  உள்ளது. இத்தருணத்தில் இந்தியாவுக்கு ஆப்பிள் தனது ஆதரவு தெரிவிப்பதுடன் தொற்றிலிருந்து மீட்புக்கான நன்கொடை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.