1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2016 (19:24 IST)

துப்பாக்கி சூடு நடத்தியவரின் கைபேசியை திறக்க மறுத்த ஆப்பிள்

துப்பாக்கி சூடு நடத்தியவரின் கைபேசியை திறக்க மறுத்த ஆப்பிள்

அமெரிக்காவின் சான் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில், ஒருவரின் கைபேசியில் உள்ள தகவல்களை திறக்க ஆப்பிள் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
 

 
அமெரிக்காவின் சான் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரது கைப்பேசியை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
 
பின்னர், அந்த கைப்பேசியில் உள்ள தகவல்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு உதவுமாறு, கலிஃபோர்னியா நீதிமன்றம், ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு உத்தரவு விடுத்தது.
 
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக், ”அமெரிக்க புலனாய்வு துறையினரின் இந்த கோரிக்கை, தமது நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளினுள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான, எஃப்.பி.ஐ முறையற்ற வகையில் உள் நுழைய வழிவகுக்கும்.
 
அத்துடன், தமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்” என்றார்.
 
நீதிமன்றத்தின் உத்தரவினை நிறைவேற்றுவதற்கு ஆப்பிள், தாம் தயாரித்த எந்த ஒரு ஸ்மார்ட்ஃபோனையும் திறக்க செய்ய ஏற்புடைய மென்பொருட்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்த அவர் இது ஒரு அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றார்.
 
மேலும், இந்த உத்தரவை ஆப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.