சாலையில் சென்ற அனகோண்டா பாம்பு : பீதியில் மக்கள் - வைரல் வீடியோ
உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் சார்புண்ணிகள் தான். மனிதன் முதற்கொண்டு விலங்குகள், தாவரங்கள் உட்பட அனைத்து வகை உயிர் வாழ்விகளும் உணவுக்காகவும் உயிர்வாழவும் உலகில் ஒன்றையொன்று சார்ந்துதான் வாழ்கின்றன.
பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ வெல்ஹோ என்ற நகரம் சாலை நெருக்கடிகள் அதிகமான இருக்கும். அதாவது இந்தியாவில் உள்ள மும்பையைப் போன்று எந்நேரமும் வாகனங்கள் செல்வதால் அங்கு அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படும்.
இந்நிலையில் அந்தப் பரபரப்பான சாலையின் குறுக்கே ஆளை விழுங்கும் அளவில் ஒரு பெரிய அனகோண்டா மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை எதிர்ப்பார்க்காத மக்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனாலும் காட்டுக்குள் இருக்கும் மலைப்பாம்பைம் சாலை மார்க்கமாய் கண்ட மக்கள் அதனை போட்டோ எடுத்தனர். அதனை வீடியோ எடுத்து சமுக வலைதளத்தில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாகி வருகிறது.