1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (13:51 IST)

அமெரிக்கா டல்லாஸ் நகரத்தின் கலவரத்திற்கு காரணமான அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவின், டல்லாஸ் நகரத்தில் காரில் சென்ற ஒரு கருப்பினத்தவரை போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
தனது காதலியுடன் ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த போலீசார், காரை நிறுத்தி லைசன்சை காட்டுங்கள் என்று கேட்டுள்ளார். உடனே அந்த வாலிபர் தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு லைசன்சை எடுக்க முயன்றுள்ளார். 
 
அவர் துப்பாக்கியைத்தான் எடுக்க முயல்கிறார் என்ற நினைத்த போலீசார் அவரை சுட்டதில், அதில் அந்த வாலிபர் காரிலேயே மரணம் அடைந்து விட்டார். அந்த சம்பவம் நடைபெற்ற போது, காரிலிருந்த அவரின் பெண் தோழி, அந்த வாலிபர் உயிருக்குப் போராடுவதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப்பில் பதிவு செய்து விட்டார்.
 
அந்த வீடியோவைக் கண்ட கறுப்பினத்தவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று கூறி போராட்டத்தை துவக்கியுள்ளனர். இன்று நடந்த போராட்டத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று போலீசார் மரணமடைந்துள்ளனர்.
 
கலவரத்துக்கு காரணமான அந்த வீடியோ: