அமெரிக்க துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி: மோடி. ஒபாமா கண்டனம்
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் உள்ள ஒரு ஆண் ஓரின சேர்க்கையாளர் விடுதியில் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியாகியுள்ளதாகவும், 53 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பிறகு அங்கு இந்த தாக்குதலே மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த பயங்கரமான தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். நான் இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்தத் தாக்குதலில் பலியானவர்களின் குடுமபத்துக்கு என்னுடைய அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அவர்.
இந்தத் தாக்குதல் தீவிரவாதத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றது. தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராடினால் தான், வீழ்த்த முடியும். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர் ஆப்கானை பூர்வீகமாக கொண்டவன் என கூறப்படுகிறது. இந்த தூப்பாக்கிச் சூட்டை கண்டித்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.