வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:32 IST)

குயின் ஆப் தி டார்க்: மாடலிங் உலகை கலக்கும் பெண்!!

தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த நயாகிம் காட்வெச் தனது கறுப்பு நிறத்தைக் கொண்டு அனைத்து மாடல்களுக்கும் சவாலான போட்டியாளராக இருக்கிறார்.


 
 
எத்திப்பியாவிலும் பின்னர் கென்யாவிலும் அகதிகள் முகாமில் அகதியாக வாழ்ந்து வந்தவர் இவர். பின்னர் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற போது தான் நிறப் பாகுபாடு பார்ப்பது தெரிய வந்திருக்கிறது. 
 
பலர் இவரை கேலி, கிண்டல் செய்து வித்தியாசமாகப் பார்த்துள்ளனர். அப்போது, இவரை மளிகைக் கடையில் பார்த்த நபர் ஒருவர் நீங்கள் ஏன் மாடலிங் துறையைத் தேர்வு செய்யக் கூடாது என்று கேட்டுள்ளார். 
 
அதன் பின்னரே மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தற்போது இவர் பல மாடல்களுக்கு போட்டியாக வலம்வருகிறார். இவரது ரசிகர்கள் இவரை குயின் ஆப் தி டார்க் என்று அழைக்கின்றனர்.