புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 6 மே 2021 (13:14 IST)

5ஜி சேவை: இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு!

5ஜி சேவை குறித்து இந்தியா எடுத்த முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி பரிசோதனைக்கு ஏர்டெல், வோடபோன், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது 
 
ஆனால் அதே சமயத்தில் 5ஜி சேவை சோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்கள் சீன நிறுவனங்களின் டெக்னாலஜியை பயன்படுத்த கூடாது எனவும் சீன நிறுவனங்களின் உதவியை நாடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது
 
அந்தவகையில் சீனாவின் Huawei ZTE ஆகிய நிறுவனங்களை இந்தியா நிராகரிப்பது இந்திய மக்களுக்கும் உலகிற்கும் நல்லது என அமெரிக்கா எம்பிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உளவு பார்க்கும் நிறுவனங்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது