வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:07 IST)

அமெரிக்காவில் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை - 'Statue of Equality' எனப் பெயர் சூடல்

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் 14ஆம் ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இந்த சிலைக்கு 'Statue of Equality'  என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
13 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை, அகமதாபாத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய சிற்பி ராம் சுடார்,உருவாக்கியுள்ளார். 
 
இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அம்பேத்கர் சிலைகளில் மிக உயரமான சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அக்டோபர் 14ஆம் தேதி இந்த அம்பேத்கர் சிலையும் திறக்கப்பட உள்ளதாகவும், இதன் திறப்பு நிகழ்வில் அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by siva