ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2024 (07:30 IST)

அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் மர்ம மரணம்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்..

அல்கொய்தா என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் காலித் அல் பதர்ஃபி என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
அமெரிக்காவுக்கு தாலிபான்களுக்கும்  இடையே நடந்த சண்டையில் தாலிபான்கள் சார்பில் அமெரிக்க படையை எதிர்த்து போரிட்டவர் தான் காலித் அல் பதர்ஃபி என்பதும் அதன் பிறகு அவர் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு அல்கொய்தாவின் தலைமை பொறுப்பை காலித் அல் பதர்ஃபி ஏற்றதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வரும் காலித் அல் பதர்ஃபி தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க வெளியிட்டது என்பதும் அவரை கண்டுபிடித்து கொடுக்க உதவி செய்தால் 5 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென காலித் அல் பதர்ஃபி மரணம் அடைந்துள்ளார் அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது
 
 
Edited by Siva