ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (10:44 IST)

ஏமனில் வான்வெளி தாக்குதல்; அப்பாவி பொதுமக்கள் 25 பேர் பலி

சவுதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.
 
ஏமன் நாட்டின் அதிபரான அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவோடு இணைந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 
 
இந்நிலையில், ஏமன் நாட்டு மேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வாழும் பகுதியின் மீது சவுதி அரேபிய கூட்டுப்படையினர் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில், அப்பகுதியில் வசித்து வந்த குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர், 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியே சோகமயமாக காணப்படுகிறது.