புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 மே 2019 (11:08 IST)

’996’ போல ’669’ - 6 நாட்கள், 6 முறை கலவி: மீண்டும் சர்ச்சையில் ஜாக் மா!

996 பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்திய ஜாக் மா மீண்டும் 669 என்ற ஒன்றை பெற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
 
உலகின் முன்னணி நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா சர்ச்சை கருத்துக்கு பெயர் போனவர். சமீபத்தில் 996 என்பதை பற்றி பேசினார். அதாவது, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரம் 6 நாட்களுக்கு உழைக்க வேண்டும் என 996-க்கு ஆதரவு அளித்து சர்ச்சையில் சிக்கினார். 
 
இப்போது 669 பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் போது 102 உழியர்களுக்கு திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவில் அவர் பேசியதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, 
 
அனைவரும் 6 நாள் 6 முறை தாம்பத்திய வாழக்கையில் ஈடுபட வேண்டும் என 669 பற்றி பேசினார். அதோடு, இவ்வாறு இருந்தால்தான் நன்கு உழைக்க முடியும், வாழ்க்கையை சீராக எடுத்து செல்ல முடியும். திருமணம் என்பது ஒரு தயாரிப்பு நிறுவனம், அதில் குழந்தைகள் ஒரிஜினல் தயாரிப்பு எனவும் பேசியுள்ளார்.