புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (12:23 IST)

சிதையும் நிலையில் ஆப்கானிஸ்தான் வங்கி கட்டமைப்பு

ஆப்கானிஸ்தான் வங்கி கட்டமைப்பே கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது என்று அந்த நாட்டின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 
ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய வங்கியின் தலைமை செயல் அதிகாரி சையது மூசா கலீம் அல்-ஃபலாகி வாடிக்கையாளர்கள் இடையே நிலவும் அச்ச உணர்வு காரணமாக ஆப்கானிஸ்தானின் நீதித்துறையை இருப்புக்காக போராட வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
காபூலில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக அவர் தற்போது துபாயில் இருக்கிறார். வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்துள்ளவர்கள் பெருமளவில் தற்போது பணத்தை திரும்ப எடுத்து வருகிறார்கள் என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது என்றும் பிற வங்கி சேவைகள் எதுவும் நிகழவில்லை என்றும் அவர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தாலிபன்கள் கைப்பற்றிய ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே அந்நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு இருந்தது.