வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 11 பிப்ரவரி 2015 (12:11 IST)

ஆம் ஆத்மியின் வெற்றி ‘அரசியல் பூகம்பம்’: அமெரிக்க செய்தித்தாள் கருத்து

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி, ஓர் அரசியல் பூகம்பம் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
 
அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தித்தாளாகிய நியூயார்க் டைம்ஸ், ‘டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி, ஓர் அரசியல் பூகம்பம் என்றும், புதிய அரசியல் கட்சியால், பிரதமர் மோடியின் கட்சி நசுக்கப்பட்டுள்ளதாகவும்‘ கூறியுள்ளது.
 
அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். ‘மேலே சென்ற எல்லாமே கீழே வந்துதான் ஆக வேண்டும்’ என்ற நியூட்டனின் விதியை சுட்டிக்காட்டி, பாஜக வின் தோல்வியை சுட்டிக்காட்டியுள்ளது.
 
இங்கிலாந்து செய்தி ஊடகமான பி.பி.சி., ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலாவது பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக’ கூறியுள்ளது.
 
லண்டனின் ‘தி டெலிகிராப்‘ செய்தி நிறுவனம், பாஜகவுக்கு அவமானகரமான சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், ‘கார்டியன்‘ பத்திரிகை, மோடிக்கு பலத்த அடி என்றும் கூறியுள்ளன.
 
பிரபல அமெரிக்க பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட், ‘மோடி பிரதமரான பிறகு, பாஜக வுக்கு முதலாவது அரசியல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று, சாதனை படைத்தது. பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.