அமெரிக்க சிறுமி பாலியல் பலாத்காரம்: தமிழக மதபோதகர் குற்றவாளி-அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 5 ஜூன் 2015 (09:15 IST)

அமெரிக்காவில் உள்ள சிறுமி ஒருவரை பாலியல் பாலத்காரம் செய்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மதபோதகர் ஜெயபால் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ரேவ் ஜோசப் பழனிவேல் ஜெயபால் (60).என்பவர், அமெரிக்காவில் உள்ள மின்னிசோட்டா என்ற பகுதியில் மதபோதகராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர், கடந்த 2005 -ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது சிறுமியியிம் தகாதமுறையில் நடந்து கொண்டார். இதனையடுத்து, மத போதகர் ரேவ் ஜோசப் பழனிவேல் ஜெயபால், தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அச்சிறுமி காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்த மத போதகர் ஜெயபால் இந்தியாவிற்கு தப்பித்து சென்று விட்டார்.
இதையடுத்து , கடந்த 2012ஆம் ஆண்டு, இந்திய காவல்துறையினரால் மத போதகர் ஜெயபால் கைது செய்யப்பட்டார். மேலும், காவல்துறை விசாரணையில், தன் மீதான பாலியல் குற்றத்தை மத போதகர் ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கு விசாரணை அமெரிக்கா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில், தமிழகத்தைச் சேர்ந்த மதபோதகர் ஜெயபால், அமெரிக்க சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மதபோதகர் ஜெயபாலை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
பாலியல் பலாத்கரா வழக்கில் மத போதகர் ஜெயபாலுக்கான தண்டனை விவரம் குறித்து, ஜூன் 15ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில், மதபோதகருக்கு குறைந்தபட்சம் 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என அமெரிக்கா நீதி மன்ற வட்டரா தகவல்கள் உறுதிபடுத்துகின்றது.


இதில் மேலும் படிக்கவும் :