1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:06 IST)

திருச்சிற்றம்பலம் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு மித்ரன் ஆர் ஜவஹரின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்து சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இதையடுத்து இயக்குனர் மித்ரன் இயக்கும் அடுத்த படம் பற்றிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அறிமுக நடிகர்கள் ஈஷான் மற்றும் ப்ரனாலி ஆகியோர் நடிக்கும் அரியவன் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.