மார்பக சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் - சிகிச்சைக்குப் பின் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி
இளம்பெண் ஒருவர் தனது மார்பக சிகிச்சையின் போது மருத்துவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த எரிகா பைகொவ் என்ற இளம்பெண் மார்பக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்க்கு யூரி என்ற மருத்துவர் மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார். எரிகாவிற்கு அனஸ்தீசியா கொடுத்த மருத்துவர், அந்த பெண்ணை பாலியல் வண்புணர்வு செய்துள்ளார்.
மயக்க நிலையில் இருந்த எரிகா, தன்னை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்வதை அறிந்தும் அவரால் அதனை தடுக்கமுடியாத நிலையில் இருந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட மருத்துவர் தனது பாலியல் சீண்டல்களை தொடர்ந்து செய்துள்ளார்.
பின்னர் ஆபரேஷன் முடிந்தது. சிகிச்சைக்குப் பின்னர் எரிகா காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் இந்த கீழ்த்தரமாக செயலை செய்த மருத்துவர் யூரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மருத்துவரே இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.