1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (09:06 IST)

3 பேரை கத்தியால் குத்திக்கொன்ற சிறுவன் சுட்டுக்கொலை

3 பேரை கத்தியால் குத்திக் கொன்ற பாலஸ்தீன சிறுவனை இஸ்ரேலிய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. பாலஸ்தீனர்கள் அவ்வப்போது இஸ்ரேலியர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 
இந்நிலையில்  ரமல்லா என்கிற இடத்தில், 17 வயதுடைய பாலஸ்தீன சிறுவன் ஒருவன் மக்கள் நிறைந்த பகுதிக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் சரமாரியாக குத்தினான். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
இதனையடுத்து அந்த சிறுவனை, இஸ்ரேலிய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்றார். இதனால் எல்லைப்பகுதியில் பாலஸ்தீன சிறுவன் கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீன வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.