கால்பந்தாட்ட மைதானத்தில் திடீரென வெடித்த வெடிகுண்டு.. 27 பேர் பரிதாப பலி..!
சோமாலியா நாட்டில் திடீரென கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு வெடித்ததை அடுத்து குழந்தைகள் உள்பட 27 பேர் பலியாகி உள்ளதாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சோமாலியா நாட்டில் கால்பந்தாட்ட மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென செயல் இழந்ததாக கருதப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பழைய பீரங்கி கொண்டு ஒன்று வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு காரணமாக குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்ததாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கால்பந்தாட்டம் மைதானத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் உயிர் சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செயல் இழந்ததாக கருதப்பட்ட பழைய பீரங்கி கொண்டை கால்பந்தம் மைதானத்தில் புதைத்தது ஏன் என்ற கேள்வியை மக்கள் எழுப்பு வருகின்றனர்.
Edited by Siva