வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (15:04 IST)

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்வு!

earthquake turkey1
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 9,500 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளன. 
 
துருக்கி மற்றும் சிறிய ஆகிய இரண்டு நாடுகளில் அடுத்தடுத்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியன.
 
இந்த நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 9,500 பிணங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஏராளமான மீட்பு பணிகள் நடைபெற இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
பூகம்பம் நிகழ்ந்த முதல் நாளிலேயே அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் பத்தாயிரம் பேர் வரை இந்த பூகம்பத்தில் உயிர் இழந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran